0 0
Read Time:2 Minute, 2 Second

இந்திய வம்சாவளியை சேர்ந்த 13 வயது நடாஷா பெரியநாயகம் என்ற மாணவி உலகின் புத்திசாலி மாணவர்களுக்கான தேர்வில், தொடர்ந்து 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் நடத்தும் “Centre of Talented Youth (CTY) என்ற அமைப்பு 1979ல் நிறுவப்பட்டது. CTY திட்டம் மாணவர்கள் கலந்து கொள்ளக் கூடிய மிகவும் மதிப்புமிக்க திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அனைத்து பின்னணிகள் மற்றும் சமூகங்களில் இருந்து 2 முதல் 12 ஆம் வகுப்புகளில் உள்ள மேம்பட்ட கற்பவர்களுக்கு கல்விசார் சிறப்பையும் மாற்ற அனுபவங்களையும் வழங்க இந்நிறுவனம் உதவுகிறது.

13 வயதான நடாஷா பெரியநாயகம் என்ற மாணவி நியூஜெர்சியில் வசித்து வருகிறார். டூட்லிங் மற்றும் நாவல் படிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ள இவர் உலகின் புத்திசாலி மாணவர்களில் முதல் இடத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிடித்துள்ளார்.

VERBAL மற்றும் QUANTITATIVE தேர்வுகள் போன்று பல்வேறு சோதனைக்கு பிறகே, உயர்தர நிலைத் தேர்வின் அடிப்படையில் முடிவுகள் அமையும். 76 நாடுகளில் 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் முதல் இடம் என்பது சாதனை தான். அதுவும் சென்னையை சேர்ந்த மாணவி உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %