மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக விவசாய சங்க மாவட்ட தலைவர் D சிம்சன் அவர்களின் தலைமையில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை ( பட்ஜெட் 2023) எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குறித்து அறிவிப்பை வெளியிடாமல் மோடி அரசு ஏமாற்றியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உரமானியத்தை கடந்த ஆண்டை விட 50,000 கோடி குறைவாக ஒதுக்கி மோசடி செய்துள்ளது. விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு வாழ்வாதார பாதுகாப்பாக திகிடும் ஊரக வேலை திட்ட நிதியை கடந்த ஆண்டை விட 29,400 கோடி குறைத்து வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. உணவு மானியத்தையும் வெட்டி சுருக்கி 89 ஆயிரத்து 844 கோடி குறைத்து ஒதுக்கி கிராமப்புற நகர்ப்புற ஏழைகள் வயிற்றில் அடித்துள்ளது எந்த விதத்திலும் கிராமப்புற மக்களுக்கு உதவாத ஒன்றிய பட்ஜெட் என்றும், அதனை கண்டித்து பட்ஜெட் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
செய்தியாளர்:க சதீஷ்மாதவன்