0 0
Read Time:5 Minute, 18 Second

தமிழ்நாட்டின் 38 வது மாவட்டாமாக பல்வேறு போராட்டங்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 25ஆண்டுகளுக்கு மேலாக போராடி, இரண்டு ஆண்டுக்கு முன்பு உதயமான மயிலாடுதுறை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் அப்படியே இருந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டமாக உருவெடுத்த பிறகும், அருகிலேயே மாவட்ட ஆட்சியர் வந்தும் கூட பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கிறதே என்று மக்களுக்கு ஒருவித அவநம்பிக்கையே மேலோங்கியது.

குறைகளை யாரிடம் சொல்லி தீர்வு காண்பது என்று மக்கள் ஏங்கி புலம்பி தவித்துக் கொண்டிருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட ஆட்சியராக தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களால் பல்வேறு அறிவுரைகள், வழிகாட்டுதல்களோடு புதிதாக பொறுப்பேற்றுள்ள மகாபாரதி தனது விவேகமான நடவடிக்கைகளால் மக்களிடம் புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். போர்க்களத்தில் வீரனிடம் கொடுக்கப்படும் வாள் ஒன்றுதான், ஆனால் அதனை சுழற்றுகின்றவனின் கையில் தான் வாளின் வேகம் இருக்கும் என்பார்கள் அவ்வழியில் தான் புதிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, குறிப்பாக மயிலாடுதுறை நகரத்தில் ஆங்காங்கே இருந்த குப்பைகூலங்களை அகற்றவும், சாலைகளில் வழிந்தோடுகின்ற சாக்கடை கழிவுநீரை அகற்றுவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு சொட்டு சாக்கடை நீர் வெளியில் வந்தாலும் நகராட்சி ஆணையரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்து களத்தில் இறங்கியதால், இதுவரை சுகாதாரத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாத அதிகாரிகள், சூரியனைக் கண்டு பணி உருகி மறைவதைப் போல, அலட்சியத்தை அகற்றி அதிகாலையிலேயே பணியை துவக்கி குப்பைகளை அகற்றி, ஆங்காங்கே வழிந்தோடுகின்ற பாதாள சாக்கடை அடைப்புகளையும், கசடுகளையும் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் துரிதமாக இறங்கியதை கண்டு, மயிலாடுதுறை மக்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது.

புதிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் நடவடிக்கையால் தான் இது நடக்கிறது என்று மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மயிலாடுதுறை நகராட்சி மட்டுமல்லாமல், சீர்காழி நகராட்சியிலும், பூம்புகார், தரங்கம்பாடி,குத்தாலம், கொள்ளிடம் என்று மாவட்டத்தின் இதர ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் புதிய ஆட்சியர் மகாபாரதியை, இந்திய சுதந்திர காலத்தில், வெள்ளையனை வெளியேற்ற புறப்பட்ட எட்டயபுரம் மகாகவி பாரதியை போல, கலெக்டராக மயிலாடுதுறைக்கும் மகாபாரதி மீண்டும் கிடைத்துள்ளார் என்று பொதுமக்கள் வாயார பாராட்டி வருகிறார்கள். இதே வேகத்தில் சென்றால் தமிழ்நாட்டின் முதன்மை மாவட்டமாக மயிலாடுதுறை மாறும் நாள் வெகுதூரம் இல்லை என்பதும் உறுதி.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் பணி இதே வேகத்தில் தொடரட்டும். அவருக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும், அதோடுகூட மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் உரிய ஒத்துழைப்பை நல்கியும், அவரது செயலுக்கு இடையூறுகள் தடைகள் செய்யாது, நல்லது நடக்க வித்திட வேண்டும் என்றும், அதனால் நீண்ட காலமாக வேதனையில் உள்ள மயிலாடுதுறை மக்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி பிறக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மாவட்ட ஆட்சியரை பாராட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %