கோவை சாந்தி ஆசிரமம் மற்றும் ஆரி கேட்டியூ இணைந்து காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இணைய வழியில் ” குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ” என்ற தலைப்பில் தமிழில் கதை சொல்லும் போட்டியை 05/ 10/ 2022 முதல் 15/ 10 /2022 வரை நடத்தினர்.
இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 22 நிறுவனங்களைச் சார்ந்த 306 பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சி. நிவேதா அவர்கள் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றார். அவரது திறமையை பாராட்டி ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பரிசு சீட்டு மற்றும் பாராட்டு சான்றிதழை சாந்தி ஆசிரம தலைவர் டாக்டர் கெஸ்வினோ அறம், ஆரி கேட்டியூ இன்டர்நேஷனல் ஜெனிவா இயக்குனர் மரியா லுசியா யூரிப், சாந்தி ஆசிரம தலைமை மற்றும் இளைஞர் தலைமைத்துவ திட்ட இயக்குனர் திரு ஜி. விஜயராகவன் ஆகியோர் இணைந்து வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.