0 0
Read Time:2 Minute, 50 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோயில் நந்தவனத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து சமூக நலத்துறை சுகாதாரத்துறை, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவுத்துறை உணவு பாதுகாப்புத்துறை, மகளிர் திட்டம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. அருங்காட்சிய அரங்கத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ரிப்பன் கத்தரித்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவி காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் நையாண்டி மேளம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %