0 0
Read Time:3 Minute, 22 Second

ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 80 பேரின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ஈரோடு இடைத் தேர்தலில் 4 கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு ராஜாஜிபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பிரிவைச் சார்ந்த அன்பு தென்னரசுவின் மண்டை உடைக்கப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்த தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் அங்கு கூடி அன்பு தென்னரசுவை அடித்தவரை கைது செய்ய கோரி 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக சீமானை கைது செய்ய கோரியும் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %