இந்திய அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த 450 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஸ்பாடிபை நிறுவனம் 600 ஊழியர்களும் ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களையும் சமீபத்தில் பணி நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இந்திய அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த 450 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. ஏற்கெனவே சர்வதேச அளவில் கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக முன்பு குறிப்பிட்டிருந்தது.
அண்மைச் செய்தி:
தற்போது விற்பனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த 450 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக பேசிய கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சஞ்சய் குப்தா, “ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின்படி கூகுளில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பணிநீக்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.