0 0
Read Time:2 Minute, 8 Second

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மானிய தத்துவ அறிஞர் கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவுக்கு எதிரானவை என்றும், அவை இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்றும் ஆளுநர் அர.என்.ரவி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

கார்ல் மார்க்ஸ் எந்த நாட்டுக்கும் எதிராகச் செயல்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், கார்ல் மார்க்சின் கருத்துகளை ஆளுநர் நன்றாக படிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமை தான் கார்ல் மார்க்சின் கொள்கை என விளக்கமளித்துள்ள ராமதாஸ், அவரின் கொள்கைகளையும், மூலதனம் நூலையும் உலகமே பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். பாமகவின் கொள்கை வழிகாட்டிகளில் கார்ல் மார்க்சும் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ல் மார்க்ஸ் குறித்து முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறுகளை பரப்பக்கூடாது என்று கண்டனம் தெரிவித்த அவர், கார்ல் மார்க்ஸ் குறித்த தவறான விமர்சனத்தை ஆளுநர் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %