0 0
Read Time:3 Minute, 0 Second

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களிக்க வேண்டும்- மேனகா

வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு….

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, காலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின் போது 5 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இதனை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குப்பதிவு செய்வதில் எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடியில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு அலுவலர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மன் பள்ளி வாக்குபதிவு மையத்தில் 96வது வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவி ப்ரிதிஷாவுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %