தரங்கம்பாடி, மார்ச்-01: இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தரங்கம்பாடி மீனவர்களை பூம்புகார் எம்எல்ஏ நிவேத எம். முருகன் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்( 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் புதன்கிழமை இரவு தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (40) , அருண் குமார் (27),மாதவன்(36 ), முருகன் (55) கார்த்திக் (32 ) ஆகியோர்
புதன்கிழமை அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலை சேதப்படுத்தி இரும்பு பைப்பால் தாக்கப்பட்டு படகில் இருந்த மீன்பிடி சாதனங்கள் எடுத்து சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த 6 மீனவர்களும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான உறுப்பினர் நிவேதா எம். முருகன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்