0 0
Read Time:2 Minute, 15 Second

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது. இதன்படி பிளஸ்-1 தேர்வு வருகிற 14-ந்தேதியும், பிளஸ்-2 தேர்வு 13-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதியும் தொடங்குகிறது. இதற்கிடையில் பிளஸ்-1, பிளஸ்-2 பள்ளி மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி மார்ச் 1-ந்தேதி முதல் 9-ந்தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

செய்முறை தேர்வு அதன்படி கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக ஆய்வகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ள பள்ளிக்கூடங்களில் 193 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வு மையங்களில் நேற்று மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வு எழுதினர். இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை சேர்ந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடந்தது. இதில் 23 ஆயிரத்து 686 பிளஸ்-2 மாணவர்களும், 21 ஆயிரத்து 961 பிளஸ்-1 மாணவர்களும் பங்கேற்றனர். இந்த தேர்வு மையங்களை அறை கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். தலைமை ஆசிரியர்களும் அவ்வப்போது சென்று ஆய்வு செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %