மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம். ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள தாலி ஆடை முகூர்த்த மாலை உள்ளிட்ட மணமக்களுக்கு சீர் வரிசை எடுத்து வந்து கோயிலில் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி
இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்கள் ஆனந்த தாண்டவபுரத்தைச் சேர்ந்த கார்த்தி திருவிடைமருதூரை சேர்ந்த புனிதா ஆகியோருக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம் உடைகள் முகூர்த்த மாலைகள் சீர்வரிசை எடுத்து வந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருமணத்தை நடத்தி வைத்தனர். அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், நகரமன்ற தலைவர் செல்வராஜ் , நகரமன்ற துணைத் தலைவர் எஸ் எஸ் குமார், வார்டு உறுப்பினர் ரமேஷ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்