மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது.
அனைவருக்கும் முதலில் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களால் எதையும் சாதிக்க முடியும். வீட்டையும் குழந்தைகளையும் பாதுகாக்க கூடியவர்கள். சீர்தூக்கி பார்க்கக் கூடியவர்கள் பெண்கள். ஆண்களும் பெண்களும் கலந்து நல்ல முடிவை எடுக்கும் பொழுது குடும்பம் சிறப்பாக இருக்கும். ஆரம்ப காலத்தில் பெண்கள் தான் விவசாயம் செய்தனர். பெண்கள் தான் எதிர்கால சக்திகள் உங்களால் எதிர்கால சந்ததிகளை உருவாக்க முடியும். இந்திய நாட்டிலும் உலக அளவில் பெண்கள் நிறைய சாதித்து உள்ளார்கள். ராணுவத்திலும் பெண்களின் பங்கு உள்ளது. பெண்கள் தினந்தோறும் யோகா செய்ய வேண்டும். அரசு பணியில் உள்ள பெண்கள் முழுமையாக உங்களுடைய பங்களிப்பை உணர்த்த வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் சிறந்த மாவட்டமாக உருவாக்க அரசு பணியில் உள்ள பெண்களின் பங்களிப்பு உள்ளது. சிறந்த ஆளுமை உள்ளவர்கள் பெண்கள். சமுதாய வளர்ச்சிக்கு உதவக் கூடியவர்கள் பெண்கள் தான் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ். மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ( பொது) நரேந்திரன் அலுவலக மேலாளர் முருகேசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றக் கூடிய பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்