0 0
Read Time:2 Minute, 48 Second

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கான இறுதிகட்ட பணிகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைளை தேர்வுத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடத்தப்பட வேண்டும். தேர்வுஅறைகளில் இருக்கை, மின்சாரம்,குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை சரிபார்க்க வேண்டும். வினாத்தாள் இருக்கும் மையங்களில் சிசிடிவிகேமரா பொருத்தி போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தேர்வு அறையில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் ஓராண்டு தேர்வெழுத தடை விதிக்கப்படும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக செயல்படும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3,100 பறக்கும் படைகள் அமைப்பு. தேர்வர்கள் நேரத்தை காட்டக்கூடிய சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %