தமிழ்நாடு அரசின் இளைஞர் நலம் விளையாட்டுத்துறை மற்றும் திட்ட செயலா கட்டுரை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினரை ஊக்கப்படுத்தி வருவதோடு பல்வேறு அரசின் நலத்திட்டங்களையும் கள ஆய்வு மேற்கொண்டு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் கோவை,கரூர் மாவட்டங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சென்ற பொழுது மிகவும் அதிக அளவிலான பிளக்ஸ் போர்டு, வரவேற்பு விளம்பரங்கள், பதாகைகள் கட்சித் தொண்டர்களால் போட்டி போட்டுக் கொண்டு வைக்கப்பட்டிருந்ததை பார்த்து மிகவும் அதிர்ச்சி உற்று, வருங்காலங்களில் தனது நிகழ்ச்சிகளுக்கு பிளஸ் போர்டு அதிக அளவில் வைக்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக புத்தகங்களையோ அல்லது சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களையோ தனக்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு கொடுக்கப்படுகின்ற பரிசுப் பொருட்களை முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும். ஏழை எளியோருக்கும், புத்தக நிலையங்களுக்கும் வழங்கப்படும் என்ற உள்ளோக்கத்தோடு சொன்ன கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் ஏற்கனவே இதேபோன்று விளம்பரங்களை குறையுங்கள், மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்று அறிவுறுத்தியும் கூட இன்னும் இப்படிப்பட்ட நிலை நீடிப்பது வருந்தத்தக்கது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் கொள்கைகளோடு இருக்கின்ற இயக்கத்தின் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இனியாவது தொண்டங்கள் ஆடம்பரமாக பிளக்ஸ் போர்டு வைப்பதை குறைத்து மக்களுக்கு சேவை செய்கின்ற செயல்களில் தாங்கள் ஈட்டிய பணத்தை செலவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி வழியில் நாங்களும் அனைவருக்கும், அனைத்து கட்சியினருக்கும் இதேகோரிக்கையை முன் வைக்கிறோம். அவசியம் ஏற்றுக்கொள்ளுங்கள்..நன்மை உங்களுக்கே,,
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.