1 0
Read Time:1 Minute, 53 Second

உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய புதிய சலுகை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கைடிராக்ஸ் எனும் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் நாட்டின் ஷாங்கி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து, தோஹா விமான நிலையம், டோக்கியோவின் ஹனீடா விமான நிலையம், சியோலின் இங்கியோன் விமான நிலையம், பாரீஸின் சார்லஸ் டி கெல்லி விமான நிலையம் ஆகியன சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதற்கடுத்தடுத்த நிலையில், இஸ்தான்புல், முனிச், சூரிச், நரிட்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையம் 36ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %