0 0
Read Time:1 Minute, 54 Second

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு முதல் கண்ணாரத்தெரு வரை சுமார் 1.20 கி.மீட்டர் தொலைவுக்கு குறுகிய சாலை கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் மழை காலங்களில் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். மேலும், கடும் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதியில் நிலவி வந்தது.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் அப்பகுதியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-இன்கீழ் ரூ.6 கோடி 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து சாலை சீரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் இத்திட்டத்தில் சாலை விரிவாக்கம் செய்து அகலப்படுத்தப்படுவதோடு, மழைநீர் வடிகால்களும் புதிதாக அமைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதன்காரமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, மழைநீர் தேங்கி நிற்பதற்கும் தீர்வு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %