0 0
Read Time:2 Minute, 43 Second

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் விநியோகம் மார்ச் 27முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மொழிப்பாடத்துடன் துவங்கும் பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கம் 2023 ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும் பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்தல் மற்றும் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது..

” நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற பொதுத்தேர்வு எழுதவுள்ள நுழைவுச்சீட்டினை இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ / மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலில் உரிய திருத்தங்கள் தலைமையாசிரியர் மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து
மாவட்டக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன். “ என அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %