ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 15-ம் தேதி டெல்லியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை வந்துள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு போரூர் ராமச் சந்திரா மருத்துவமனை “ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நலம் பெறுவார்” எனவும் தெரிவித்தது.
இன்று போரூர் ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“கடந்த 15ம் தேதி விகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் கொரோனாவிலிருந்து பூரணமாக மீண்டுள்ளார். கொரோனா சோதனையில் அவருக்கு தற்போது “நெகடிவ்” என முடிவுகள் வெளியாகியுள்ளது” என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் நலமுடன் இருப்பதாக வீடீயோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.