பரங்கிப்பேட்டை மார்ச் 31-
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் தலைமையில் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முகமது யூனுஸ் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் திமுக அதிமுக உள்பட அனைத்து வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள். பத்தாவது வார்டில் மதினா நகரில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் பூங்காவிற்கு வள்ளலார் ராமலிங்க அடிகளார் பெயரை சூட்டும் படி அதிமுக கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர் கோரிக்கை வைத்தார்.அதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் மதினா நகர் பூங்காவிற்கு மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயர் சூட்டுவதற்கு. ஒரு மனதாக திமுக கவுணன்சிலர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.
மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயர் சூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதீனா நகரில் கட்டப்பட்டு வரும் பூங்காவிற்கு வள்ளலார் பெயரை வைக்காததை கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள். 10-வார்டு ஜெயந்தி ஜெய்சங்கர். 16 -வார்டு.இந்துமதி சந்தர். 13 -வார்டு-ஜெய்சங்கர். .மற்றும் மற்றும் சுயேட்சை கவுன்சிலர். 10-வார்டு அருள்முருகன்- ஆகியோர் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதிமுக கவுன்சார் மூன்று பேர் ஒருவர் நான்கு பேர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் வெளிநடுப்பு செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் நடந்தது இதில் பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி உட்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றார்கள்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி