அரசு உதவி திட்டங்களை பெறுவதில் பெருந்தன்மையோடு பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்.
அவர் கூறுகையில்,
” அரசின் சார்பில் பல்வேறு நல உதவி திட்டங்கள் மற்றும் இலவச அறிவிப்புகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய திட்டங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் தான் செய்யப்படுவதை அனைவரும் உணர வேண்டும். உண்மையாகவே பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்கள் அத்திட்டங்களின் பயன்களை பெறுகின்ற பொழுது திட்டத்தின் நோக்கமும் நிறைவேறுவதுடன், பாதிக்கப்பட்டவர்கள் இன்பம் பெறுகின்ற நிலையும் ஏற்படும். ஆனால் விவசாயத் திட்டங்களாக இருக்கலாம், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள குடும்பத்திற்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக இருக்கலாம், இன்னும் எண்ணற்ற திட்டங்களாக இருக்கலாம் அத்தனையும் அனைவருக்கும் வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், வசதி படைத்தவர்களும்,நிரந்தரமாக மாத வருவாய் அதிகமாக உள்ளவர்களும் இலவச திட்டத்தைப் பெற வேண்டும் என்று முந்திச் செல்வதும் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுவதை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். ஆகவே அரசின் சார்பில் கொடுக்கப்படுகின்ற இலவச மற்றும் சலுகை திட்டங்களை உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு இத்திட்டங்கள் செல்வதற்கு வழி விடுகின்ற ஒரு நல்ல நடைமுறை பழக்கத்தை பெருந்தன்மையோடு, பொருளாதாரத்திலும் வசதிகளிலும் மேம்பட்டவர்கள் ஈடுபட்டால் மட்டுமே நிச்சயமாக கஷ்டப்படுபவர்கள் தங்கள் நிலையிலிருந்து ஒருபடி முன்னேறி அல்லது கஷ்டத்திலிருந்து விடுபடுகின்ற சூழல் ஏற்படும். அத்தகைய பெருந்தன்மையான முயற்சியில் இனியாவது அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்போடு ஈடுபட வேண்டும் என்பதே வேண்டுகோள். அவ்வாறு செய்கின்ற பொழுது அரசுக்கும் நிதி பற்றாக்குறையில் திட்டங்களை உரியவர்களுக்கு மட்டும் கொண்டு செல்ல முடியும். இல்லையேல் வரியவர்கள் வரியவர்களாகவும் இருக்கும் அவல நிலையே இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் நீடிக்கும் என்பது உறுதி”.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.