0 0
Read Time:2 Minute, 20 Second

தரங்கம்பாடி, ஏப்ரல்- 03:
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பை மத்திய ஒன்றியம் மாணிக்கபங்கு ஊராட்சி ஆனைக்கோயிலில் புதிதாக அரசு நுகர்பொருள் அங்காடி ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் செம்பை தெற்கு ஒன்றியம், காட்டுச்சேரி ஊராட்சியில் தரைதல நீர்த்தேக்க தொட்டி ரூ 3 லட்சம் மதிப்பீட்டிலும், திருக்களாச்சேரி ஊராட்சியில் புதிதாக பேருந்து பயணிகள் நிழலகம் ரூ 8 லட்சம் மதிப்பீட்டுலும், இலுப்பூர் ஊராட்சியில் பேருந்து பயணிகள் நிழலகம் ரூ 10 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட திமுக துணைச் செயலாளர் மு. ஞானவேலன், செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எம் சித்திக், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, விஜயலட்சுமி, வட்ட வழங்க அலுவலர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி கே எஸ் எஸ் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மோகன், விஜயலட்சுமி சாமிநாதன், சம்சாத் ரபிக், ரெங்கராஜ், கே.பி.ராஜா, ரவி மற்றும் பொதுமக்கள் திமுக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %