0 0
Read Time:1 Minute, 41 Second

மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ்குட்டிகோபி பிறந்தநாள் இன்று மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அருகாமையில் உள்ளகோயில்களில் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு பெரியார் மருத்துவமனையில் சுமார்500க்கும் மேற்பட்ட மக்களுக்கு மதிய உணவினை சி.எஸ்.குட்டிகோபி வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பிற மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், ரசிகர்கள், தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மாவட்ட தலைமையின் பிறந்த நாளை முன்னிட்டு மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ய இருப்பதாக மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %