0 0
Read Time:3 Minute, 13 Second

பேரவைத்தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக்கேள்வி எழுப்ப அனுமதி மறுத்ததால் சபாநாயகரை பார்த்து பண்ருட்டி உறுப்பினர் வேல்முருகன் ஆவேசமாக பேசினார். யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்? யாருக்கு கொடுக்க கூடாது என்பது தனக்கு தெரியும், பேரவையில் பெரிய சத்தமெல்லாம் போடக்கூடாது என வேல்முருகனை பேரவைத்தலைவர் அப்பாவு கண்டித்தார்.

பேரவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த வேல்முருகன், தன் தொகுதி சார்ந்த நிஷா எனும் பெண், நீட் பயிற்சி மையத்திற்கு சென்று திரும்பும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மான கடிதம் வழங்கியும் சபாநாயகர் பேச அனுமதி வழங்கவில்லை என குற்றம் சாட்டினார்.

தெப்பகுளம் விபத்து உட்பட 10 க்கும் மேற்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியும் சபாநாயகர் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர் பேசினார். சபாநாயகர் மூத்த உறுப்பினர் எனவும், அவரை ஒரு போதும் மிரட்டுவது போல் பேசியது கிடையாது எனவும் ஆனால் அவர் அது போன்ற அவைக்குறிப்புகளில் பதிவு செய்து வருவது ஏற்புடையதல்ல எனவும் வேல்முருகன் கூறினார்.

இன்றும் கூட சட்டம் படித்த நான், சட்டமன்ற விதிகளை தெரிந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்ற போது, வேல்முருகன் மிரட்டுவது போல அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டிருப்பதாக கூறிய வேல்முருகன், உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மூத்த உறுப்பினரான என்னை கடைசி இருக்கையில் அமரவைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை எனக்கு முன் அமர வைப்பது எந்த சட்டமன்ற விதிகளில் வருகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %