0 0
Read Time:4 Minute, 4 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் 750 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார் மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் 750 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக மாவட்டத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்வது குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:- மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் தூர்வாரப்பட வேண்டும் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் தனிப் பிரிவு, நீர்வளத்துறை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மனுக்கள், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள்.

மேலும் நீர் வளத்துறை அலுவலர்கள் நேரடியாக தள ஆய்வு செய்து தேர்வு செய்துள்ள முன்னுரிமை மற்றும் அத்தியாவசிய அடிப்படையில் பணிகள் தூர்வார எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 8 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்றடையவும், வெள்ளக் காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 750 கிலோ மீட்டர் தூரத்திற்கு 51 பணிகள் ரூ.8 கோடியே, 6 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன ஆதாரங்களை தூர்வாருவதற்கு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு வந்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் விவசாய சங்க பிரதிநிகள், விவசாயிகள், துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %