உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியில் போலீஸ் காவலில் இருந்த முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அஹமது அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு இருவரும் பேட்டியளித்து சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றனர். இச்செயலில் ஈடுபட்ட மூவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் யோதி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 17 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.