தரங்கம்பாடி, ஏப்ரல்- 15:
இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் உண்ணாமல் நோன்பிருந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 24 ஆம் தேதி ரம்ஜான் நோன்பு திறப்பு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக் ஏற்பாட்டில் திருக்களாச்சேரி ஊராட்சி தனியார் திருமண மண்டபத்தில் மும்மதத்தினரும் சேர்ந்து ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான.முருகன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் ஆகியோர் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி சாப்பிட்டு நோன்பு திறந்தனர். இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி சங்கர், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், ராஜா, வைத்தியநாதன், தரங்கைப் பேரூர் கழக செயலாளர் முத்துராஜா மற்றும் தரங்கம்பாடி கத்தோலிக்க திருச்சபை பங்குத்தந்தை அருளானந்து, தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்