0 0
Read Time:2 Minute, 22 Second

மயிலாடுதுறை, ஏப்ரல்- 18,:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் நலத்திட்டங்கள் உதவி செய்து வரும் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் சார்பில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி அறக்கட்டளையின் நிறுவனர் பால. வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது.

அகில இந்திய தற்காப்பு கலைஞர்கள் சங்க மாநில பொருளாளர் ராதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு கர்ணசூர்யோதயம் அறக்கட்டளையின் தலைவர் வைரவன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மயிலாடுதுறை தமிழ் சங்கத்தின் நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் நடிகர் விவேக்கிற்கு மெளன அஞ்சலி செலுத்தி அவருடைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பற்றியும் பொதுநல சேவை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நடிகர் விவேக்கின் கனவு திட்டமான ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் சேவையில் கர்ணசூர்யோதயம் அறக்கட்டளை பெரும் பங்களிப்பு இருக்கும் என அறக்கட்டளையின் துணைசெயலர் மித்ரா கார்த்திக் தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஜெனிபர் பவுல்ராஜ் மரக்கன்றுகளை வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் செயலாளர் சிவசுப்பிரமணியன், திட்டக்கு குழு தலைவர் மணிவண்ணன், மித்ரா காபி பார் ராஜ்குமார். அறக்கட்டளையின் உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறக்கட்டளை துணைதலைவர் மணிகண்டன் நன்றி உரையாற்றினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %