0 0
Read Time:3 Minute, 42 Second

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. மேலும், கொடுங்கையூர், மணலி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா நகர், நீலாங்கரை, கோவை, திருச்சி, மைசூர், ஹைதராபாத், கர்நாடாக உள்ளிட்ட இடங்களில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

சட்டவிரோதமாக நிலங்களை பத்திரப்பதிவு செய்ததாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அரக்கோணம் , திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த மூன்று நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அண்ணாநகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவருடைய மகனும் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும் ஜி ஸ்கொயர் உரிமையாளர்களின் ஒருவருமான கார்த்திக் ஈஸ்வர் மற்றும் நிறுவனத்தின் ஆடிட்டர் சண்முகராஜ் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் அர்ஜுன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 50 மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்றது.

நேற்று சென்னையில் உள்ள கார்த்திக் அலுவலகம் மற்றும் ஆறு இடங்களில் சோதனையானது நிறைவடைந்தது. மீதமுள்ள அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தநிறுவனம் காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி குவித்துள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது.

மேலும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றப்பட்டு உள்ளதாக வருமான வரி துறை மூலமாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜி ஸ்கொயர் நிறுவனம் நிலங்களை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஜி ஸ்கொயர் நிருவனம் எந்தெந்த பகுதிகளில் பத்திரப்பதிவு செய்துள்ளது என்பது குறித்து முதற்கட்டமாக அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %