0 0
Read Time:3 Minute, 45 Second

தரங்கம்பாடி,மே 1:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் மே 1-ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வரவேற்று பேசினார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் வீட்டுமனை பட்டா வேண்டி பொதுமக்கள் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தனர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கீதா நாராயணன், ஊராட்சி செயலாளர் நாகராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் எடுத்துகட்டி சாத்தனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் பைலட் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் செம்பை தெற்கு ஒன்றிய திமுக அவை தலைவருமான ஆர்.மனோகரன் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, திருவிடைக்கழி ஊராட்சி மன்ற தலைவர் கே பி ராஜா தலைமையிலும் கூடலூர் ஊராட்சியில் செல்வம் தலைமையிலும் மேமாத்தூர் ஊராட்சியில் தட்சணாமூர்த்தி தலைமையிலும் மே தின சிறப்பு கிராம கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழியாக சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருக்க எப்போதும் கழிப்பறையை மட்டுமே பயன்படுத்துவோம், குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவோம், எனது வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தெருக்களில் தேங்கவிடாமல் பாதுகாப்பாக அகற்றுவோம், எப்போதும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்போம், கடைகளுக்கு செல்லும்போது துணிப்பையை உடன் எடுத்து செல்வோம், நமது கிராமத்தை எழில்மிகு கிராமமாக மாற்றும் முயற்சியில் நான் பங்கேற்பதுடன், குடும்பத்தினரையும் பங்கேற்க வைப்போம் என்று கிராம பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக் மற்றும் கிராம மக்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %