0 0
Read Time:2 Minute, 8 Second

அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டிற்கு பின்பு நிரூபணம் ஆகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில் கடந்த மாதம் ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா மற்றும் புரட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில், இன்று தேனி மாவட்டம், பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஒபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றத்தில் எங்கள் தரப்பு தொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையமும், இபிஎஸ்-ம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரியது தொடர்பாக தேர்தல் ஆணையமும், இபிஎஸ்-ம் விளக்கம் அளிக்கட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது திருச்சி மாநாட்டிற்கு பின் நிரூபணம் ஆகியுள்ளது என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %