பூம்புகார்- மே- 06:
மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற பழமை வாய்ந்த நகரமான பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா என்று சொல்லக்கூடிய இந்திர விழா மிகப் பிரமாண்ட மூலம் முறையில் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்த் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர்ர் ஏ.பி.மகாபாரதி மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பூம்புகாரின் சிறப்புகளை பற்றிய விளக்க உரையாற்றினர்.
அதைத் தொடர்ந்து கிராமிய நடனங்கள், இன்னிசை நிகழ்ச்சி, பூம்புகாரை பற்றிய சிறப்பு பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கலை நிகழ்ச்சிகள் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு பரிசு மற்றும் பொன்னாடை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் த. அரவிந்த் குமார், கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், அமுர்த. விஜயகுமார், முருகமணி, தரங்கை பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம்பேரூராட்சி தலைவர் சங்கீதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆனந்த், காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டார், மீனவ சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்