தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலைக்குள் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அத்துடன் மே 10 தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் புயலாக மாறும்.
இது மே 12ஆம் தேதி காலை வரை முதலில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம், மியான்மர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.