கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி சிதம்பரம் காவல் உட்கோட்டத்தில் 14.05.2023 ஆகிய ம்தேதி சிறப்பு அதிரடி வேட்டை நடத்தி உட்கோட்டத்தில் கஞ்சா மற்றும் மதுபான விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க சிதம்பரம் உட்கோட்டத்தில் உள்ள 8 காவல் நிலையங்களிலும் தனித்தனியே தனிப்படைகள் அமைத்து சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது.
அதில் சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் 3 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1) ராஜா வயது-38, த/பெ. கலியமூர்த்தி, செ-41/41, முருகன்கோயில் தெரு, MK தோட்டம், சிதம்பரம் 2) தியாகராஜன்(48), த/பெ. கண்ணாயிரம்,நெ-9, கள்ளுக்கடைசந்து, சிதம்பரம் 3) கவுஸ் பாட்ஷா(50), த/பெ. அப்தூல்கபார், சந்தைதோப்பு தைக்கால், சீர்காழி தாலுக்கா ஆகிய 3 மூன்று நபர்களிடமிருந்து மொத்தம் 168 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட 1) விக்ரம் (21), த/பெ. ரமேஷ், 4 வது குறுக்கு தெரு,வினாயகர் தெரு, மீதிகுகுடி, சிதம்பரம் 2) ரவி(19), த/பெ. ‘செல்வம், கொத்தங்குடிதோப்பு ஆகியோர்களிமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா (மதிப்பு சுமார் 11,000/-) கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதே போல பரங்கிப்பேட்டை காவல்நிலையத்தில் மதுபான வழக்கு 1 பதிவு செய்யப்பட்டு அதில் ஜெயக்குமார்(23), த/பெ. செல்வேந்திரன், விடுதலைநகர், C.புதுப்பேட்டை என்பவரிடமிருந்து 20 (180ML) பாண்டி மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் உட்கோட்டத்தில் மொத்தம் 8 மதுவிலக்கு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு பெண்கள் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 209 (180ML) மதுபாட்டில்கள் கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
அதே போல கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட 2 நபர்களை கைது செய்து அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா 1.100 கிலோ கிராம் மதிப்பு 11,000/- ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இதே போல அவ்வபோது திடீரென சிறப்பு வேட்டைகள் நடத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி