0 0
Read Time:2 Minute, 30 Second

முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி வரும் 29-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுகவினர் இன்று பேரணியாக சென்றனர். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார். சட்டம்-ஒழுங்கு, போலி மது, விஷச்சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி புகார் மனுவில் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு அரசு மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் ஊழல் முறைகேடுகள், விஷச்சாராய மரணங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வலியுறுத்தியும், அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடு, விஷச்சாராயம், போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %