0 0
Read Time:3 Minute, 45 Second

குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகரகள் இரவு முழுவதும் வெற்றியை கொண்டாடினர்.

ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று முதல் துவங்கிய
நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்தி ருந்த குஜராத்
டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்
முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடின.

குஜராத் டைட்டன்ஸ் சார்பில் முகமது சமி மற்றும் மோஹித் சர்மா ஆகியோர் தலா 2
விக்கெட்டுகளை வீழ்த்தினர். 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத்
டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157
ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10
ஆவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. வரும் 28 ஆம் தேதி
நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், குவாலிபயர் 2 இல் வெற்றி பெரும் அணியுடன்
சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்ற தருணம் சென்னை ரசிகர்களிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வெற்றி பெற்ற போது மைதானத்தில் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தது.

குறிப்பாக சென்னை வீரர் மதீசா பத்திரான வீசிய ஓவர்கள், சுப்மன் கில் விக்கெட்,
ரஷித் கான் அடித்த பவுண்டரிகள், ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே ஆகியோரின்
பேட்டிங் என அனைத்து விதமான அணியின் பங்களிப்பையும் சென்னை ரசிகர்கள் தங்கள் விருப்பம் போல வெகுவாக விமர்சித்தனர். மேலும் இவை அனைத்து மாயங்களும் தோனியால் மட்டுமே நிகழ்ந்தது என தெரிவித்தனர்.

மேலும், 5 முறை கோப்பை வென்ற மும்பை அணியை வீழ்த்தி, 5 ஆவது முறையாக சென்னை வெல்லும். குஜராத் அணியை குஜராத் மண்ணிலேயே மீண்டும் ஒருமுறை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வெல்லும். ஒருவேளை லக்னோ அணி இறுதிப் போட்டியில் களம் கண்டால், சுலபமாக சென்னை அணி லக்னோவை வீழ்த்தி கோப்பையை வெல்லும் எனவும் தெரிவித்தனர்.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர்
ஜெயண்ட்ஸ் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மொதவுள்ளன. இதில் வெற்றி பெரும்
அணியே, 26 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள குவாலிபயர் 2 போட்டியில்
குஜராத் அணியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %