ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில், 8,000 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில், மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லை. இதை ஐந்து வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், மாவட்ட, விரைவு பேருந்துகளில் 5 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது ஐந்து வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.