0 0
Read Time:2 Minute, 35 Second

தரங்கம்பாடி, மே- 28:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு உருவாகும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் உத்தரவின் பெயரில் வாய்க்கால் ஓரங்களில் இரண்டு அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்பகுதிகளில் குப்பைகள் கொட்ட கூடாது என எச்சரித்து அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டு அறிவிப்பு பதாகைகளும் சமூக விரோதிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு கிடந்திருக்கிறது. இதனை அறிந்த எடுத்துக்கட்டி ஊராட்சி மன்ற தலைவர் பைலட் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு பதாகை உடைத்து சேதப்படுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அறிவிப்புவதாக உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் கிராம ஊராட்சிகளில் இதுபோன்று பதாய்களை வைப்பது அரிது அந்த வகையில் பதாகைகள் வைத்தும் சமூக விரோதிகள் இச்செயல்களை செய்திருப்பது எடுத்துக்கட்டி ஊராட்சி கிராம மக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் இது போன்ற சட்டவிரோதங்களை செய்யும் நபர்களை காவல்துறை பிடித்து தக்க தண்டனை வாங்கி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %