0 0
Read Time:2 Minute, 21 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் சோழர்களால் உருவாக்கப்பட்ட 900 வருஷம் பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலில் ரஷ்யாவைச் சார்ந்த அலெக்ஸ்கே – மேயா தம்பதியினர் சிறப்பு வழிபாடு செய்தனர். இவர்கள் ரஷ்யாவில் மென் பொருள் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றன மென்பொருள் பணியாளராக வேலை பார்த்து வந்தாலும் இந்தியா மற்றும் தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை கேள்விப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா வந்தனர்.

வருடம் தோறும் விடுமுறை நாட்களில் தமிழகத்திற்கு வருகை தந்து ஆலயங்களில் வழிபாடு நடத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களது மூன்று வயது மகளுடன் திருக்கடையூர், திருநள்ளாறு, வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, திருவிடைக்கழி ஆகிய ஆலயங்களில் தரிசனம் செய்துவிட்டு நல்லாடை அக்னீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

ஆலய பிரகாரங்களில் இந்து முறைப்படி வழிபாடு செய்து, கருவறை முன்பு தியானத்தில் அமர்ந்து மகா மிருத்திஞ்சய மந்திரம் , நவகிரக காயத்ரி மந்திரங்கள் முருகன் தன்வந்திரி உள்ளிட்ட மூல மந்திரங்கள் ஆகியவற்றை கண்ணை மூடி தெளிவான உச்சரிப்புடன் வேதம் படித்த சாஸ்திரிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் உச்சரித்து வழிபாடு நடத்தியது பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரஷ்ய தம்பதிகளுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் மணிவண்ணன், நாடி ஜோதிடர் கோபிநாத் மற்றும் கோயில் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %