0 0
Read Time:2 Minute, 36 Second

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை கடலூர் மாவட்டம் நெய்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பஸ்சை மதுரையை சேர்ந்த அழகர்சாமி(வயது 45) என்பவர் ஓட்டினார்.

நேற்று மதியம் 1 மணியளவில் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் சிவன்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வளைவில் திரும்பியது. அப்போது நெய்வேலியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ்சும், மதுரையில் இருந்து வந்த அரசு பஸ்சும், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பஸ்களின் முன்பகுதி சேதமடைந்தது. கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன.

பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அனைவரும் சிகிச்சைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து நிகழ்ந்ததும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோரிக்கை மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நெய்வேலி நகர சோதனை சாவடி வரையில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நான்கு வழி சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த பகுதியில் ஒரு வழிச்சாலையாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதாகவும், இந்த சாலையின் சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %