0 0
Read Time:2 Minute, 9 Second

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கஞ்சாநகரம் கிராமத்தில் வசிக்கும் 64 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு
கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்துக்கு செல்ல வாய்க்காலை கடந்து செல்ல வேண்டி இருந்ததால் அங்கு பாலம் வசதி இல்லாத காரணத்தால் அரசால் வழங்கப்பட்ட அந்த இடத்தில் யாரும் குடியேறவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு பலர் அந்த இடத்தை தற்போது ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை சந்தித்த 64 குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அளவீடு செய்து அதே இடத்தில் தொகுப்பு வீடுகள் அமைத்து தர வேண்டும் என்றும் அந்த இடத்துக்கு செல்வதற்கு பாலம் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அம்பிகாபதி ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் நாகவல்லி சர்வேயர் சிந்துஜா கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தையும் பாலம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மறு அளவீடு செய்து அந்த 64 பயனாளிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்..

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %