தரங்கம்பாடி, ஜூலை- 09:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சமூக நல அறக்கட்டளை சர்வதேச மனித உரிமைகள் குற்றத் தடுப்பு அமைப்பு மற்றும் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவம் மற்றும் இரத்ததான முகாம் சமூக ஆர்வலரும் மாசா குரூப்ஸ் பொறுப்பாளருமான பாரிஸ் மாஷா அலி தலைமையில் நடைபெற்றது.
விநாயக மிஷின் மருத்துவமனை மருத்துவர் குணசேகரன், சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஹஜ் முகமது, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு அமைப்பின் மாநில வடக்கு ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு மாநில தலைவர் கோபிநாத் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து உரையாற்றினார். ரியாத் நாட்டின் ஜாஸீரா பாராமெடிகளின் சீனியர் மைக்ரோ பயாலஜிஸ்ட் இ.எம்.எம்.ஜாகிர் உசேன் ரத்தம் வழங்கி ரத்த தான முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை, எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், தோல், கண், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்ற முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர் மேலும் ஏராளமான தன்னார்வலர்கள் ரத்ததானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், செம்பை ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக், சமூக செயற்பாட்டாளரும், சமூக நல அறக்கட்டளை அறங்காவலருமான ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான், செயலாளர் மணிகண்டன், சர்வதேச மனித உரிமை மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு மயிலாடுதுறை மாவட்ட தலைவர் இன்பராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் சோழ அரசன், ஜோதி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜோதி ராஜன், ஆயப்பாடி வக்ப் நிர்வாக சபை செயலாளர் நூருல்லாஹ் , பொருளாலர் ஹலீல் ரஹ்மான், பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி திருக்களாச்சேரி ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்