0 0
Read Time:2 Minute, 31 Second

கடலூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற இல்ல விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.இந்நிலையில், நல்லாத்தூர் கிராமத்தில் திமுக நிர்வாகி இல்ல விழாவிற்கு எம்எல்ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். மண்டபத்தின் உள்ளே சென்ற சில நொடிகளில் திடீரென பெட்ரோல் குண்டு ஒன்று மண்டபத்தின் வெளியே
இருந்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு மண்டபத்தின் வரவேற்பு பகுதியில் விழுந்ததால் எம்எல்ஏ ஐயப்பன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஐயப்பன் எம்எல்ஏ வை பாதுகாப்பாக
திமுகவினர் அங்கிருந்து அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். சம்பவம் குறித்து
நியூஸ்7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர்
ஐயப்பன், தான் நலமுடன் இருப்பதாகவும்,போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதனிடையே சம்பவம் நடந்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்பதால் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்தார். இத்தகவல் பரவியதைத்தொடர்ந்து எம்எல்ஏ வீட்டின் முன் நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
33 %
Angry
Angry
33 %
Surprise
Surprise
33 %