புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6-வது புத்தகத் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள் நகர் மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது,
இதில் வரவேற்புக் குழு தலைவராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு. ஐ.சா.மெர்சி ரம்யா அவர்கள் உள்ளார். . புத்தகத் திருவிழாவில் அனுமதி இலவசம்,புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போட்டிகளுக்கான பரிசளிப்புகள், பாராட்டுகள் மற்றும் விருது வழங்குதல், தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், விஞ்ஞானிகள், திரைப்பட இயக்குநர்கள், பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு மணி நேர நிகழ்வாக புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற தலைப்பில் காலை 11 மணி முதல் 12 வரை,
ஒரு மணி நேரம் மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பொன்மாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் சந்திரா ரவிந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார், பள்ளியின் முதல்வர் ஜெயராணி அவர்களது தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.