0 0
Read Time:3 Minute, 49 Second

மாவட்ட கலை மன்றம் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய ஆண்டுகளுக்கு கலை விருதுகள் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் மாவட்ட கலை மன்றத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் இயல், இசை நாடகம் முதலிய கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்பட உள்ளது.

ஆகவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயதும், அதற்குற்பட்ட கலைஞர்களுக்கு “கலை இளமணி” விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு “கலை வளர்மணி” விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு “கலைச் சுடர்மணி” விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு “கலை நன்மணி” விருதும் 66 வயதிற்குமேற்பட்ட கலைஞர்களுக்கு “கலை முதுமணி” விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயது சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், கடலூர் மாவட்டத்தில் தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. இந்த மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து வருகிற 25-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி யுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %