0 0
Read Time:3 Minute, 11 Second

மயிலாடுதுறை- ஜூலை- 15:
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 25-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் அபிராமி வெங்கடேசன். வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வு காரணமாக 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தார். சுப்பிரமணியனுக்கு ஆண்டுதோறும் அவரின் மகன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் கிராமமக்களுக்கு நல உதவிகளை வழங்கி வருகிறார். வெங்கடேசன் தனது தந்தையாரின் நினைவைப் போற்றும் வகையில், அகரகீரங்குடி கிராமத்தில் சுப்பிரமணியனுக்கு முழு உருவச் சிலை அமைத்து, மணி மண்டபம் எழுப்பியுள்ளார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு மணி மண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் .அகரகீரங்குடி, பட்டமங்கலம், முட்டம், சிறுகோவங்குடி, ஊர்குடி ஆகிய 5 கிராமங்களில் வசிக்கும் கிராம பொது மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், இந்த 5 கிராமங்களில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்கிகினார். மேலும் 2000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், குத்தாலம் க.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் மு..ஞானவேலன், செல்வமணி, தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், எம்.அப்துல்மாலிக், ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், முருகமணி, இளையபெருமாள், மங்கை சங்கர், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் விக்கி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

வயது முதிர்வில் வீட்டில் இருக்கும் பெற்றோரை பராமரிக்கவே இக்கால இளைஞர்கள் தயங்கும் நிலையில், உயிரிழந்த தனது தந்தையின் நினைவாக அவருக்கு சிலை அமைத்து, மணி மண்டபம் அமைத்து ஐந்து கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசனை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்து வாழ்த்துக்கள் கூறினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %