0 0
Read Time:2 Minute, 30 Second

புவி வட்டப் பாதையில் பயணித்து வரும் சந்திராயன் – 3 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுப்பாதை தொலைவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்பட்ட நிலையில் அதன் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி செயலிழந்தது.

இதனையடுத்து நிலவின் தென் துருவத்தையொட்டிய பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான் 3 விண்கலம் சுமாா் ரூ.615 கோடியில் வடிவமைக்கப்பட்டது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் அந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில்,சந்திரயான்-3 விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை தொலைவு வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

“விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதை தொலைவை அதிகரிக்கும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. தற்போது விண்கலம் குறைந்தபட்சம் 173 கிமீ. தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீ. (41,762 கி.மீ. X 173 கி.மீ) தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %