நாடாளுமன்றத் தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து சந்திப்போம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அம்மா மக்கள்
முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சாமி தரிசனம்
மேற்கொண்டார். முன்னதாக ஆண்டாள் கோயில் வளாகத்தில் இருந்த யானைக்கு பழங்களை வழங்கினார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது டிடிவி தினகரன் பேசியதாவது:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற
கேள்விக்கு, பதிலளித்த அவர் அது குறித்து ஊடகங்கள்தான் தெரிவிக்க வேண்டும், அவர் ஒரு கட்சியின் தலைவர் அதனால் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். திமுக ஊழல் பட்டியல் 2 வெளியிட்டது குறித்து தான் இன்னும் பார்க்கவில்லை.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலை
சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்து தான்
பயணிப்போம்.
நாங்கள் NDA கூட்டணியில் இல்லை ,எங்களை பாஜக மாநில தலைவர்
நடைபயணத்திற்கு அழைக்காதது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக-வின் நிலைப்பாடு குறித்து டிசம்பர்
மாதத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.