0 0
Read Time:2 Minute, 26 Second

மயிலாடுதுறை அருகே மின்மாற்றி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன் ஊராட்சி உக்கடை கிராமத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து உக்கடை கிராமத்திற்கு சீரான மின்சார வசதி அளிப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அந்த பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்திட தேவையான மின்சாதன பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஆனால் மின்மாற்றி அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை, தனியார் ஒருவர் தனக்கு சொந்தமான இடம் என்று கூறி தடுத்து நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக மின்சாதன பொருட்கள் கொண்டு செல்லப்பட்டும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் மின்மாற்றி அமைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில், நீடூர் மெயின் ரோட்டில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %