0 0
Read Time:4 Minute, 7 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 47 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இந்த ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதனம் மானியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் அமைக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் அடைவதற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்பவராக இருக்க கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெறமுடியும். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோரின் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும். தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் தொடங்க உள்ள தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வி சான்றிதழ், பட்டப்படிப்பிற்கான கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வருகிற(ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லது வேளாண் துணை இயக்குனர்(வேளாண் வணிகம்) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ள பயனாளிகள் ‘அக்ரீஸ்நெட்’ இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %